TamilsGuide

தலைமைத்துவத்திற்கு சிறிதரனே பொருத்தமானவா் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதையே எதிா்பாா்ப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் நடைபெற்ற விசேட  ஊடக சந்திப்பின் போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

“தமிழ்த் தேசிய கட்சிகள் என்ற முறையிலும் தமிழ்த் தேசிய உணா்வுகளை கொண்டவர்கள் என்ற முறையிலும் எங்களுக்கும் சிறிதரனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

அந்த விதத்தில் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனையே வரவேற்கின்றோம்.

ஆனால் இதுரை காலமும் தமிழ்த் தேசியத்திற்கு குரல் கொடுத்து வருகின்ற ஒருவர் என்ற முறையிலேயே அவரை நாங்கள் அழைத்திருக்கின்றோம். அதேபோன்று தான் பேராசிரியர் கணேசலிங்கத்தையும் அழைத்திருக்கிறோம்.

ஆகவே தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலே நாங்கள் முன்செல்ல வேண்டும் என்பதால் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை” என சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment