TamilsGuide

நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயிலின்  ஆடிவேல் தேர்

நாட்டுக்கோட்டை நகரத்தார் நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயிலின்  ஆடிவேல் தேர் திருவிழாவின்  இரதோற்சவம் பக்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன்  இன்று  இடம்பெற்று வருகின்றது.

கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கிரியாகால நிகழ்வுகளில்  நேற்றைய தினம் காலை பாற்குட பவனியும் , மாலை சப்பரத்திருவிழாவும் நடைபெற்றது.

இன்று காலை 4 மணிக்கு  அஸ்டோத்திர சத சங்காபிஷேகத்தை தொடர்ந்து  தேர்திருவிழா நடைபெற்று வருகின்றது.

நாளை காலை தீர்த்தோற்சவமும், மாலை திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளதோடு, நாளை மறு தினம் பூங்காவனத்திருவழாவும் ,12 ஆம் திகதி பைவரவர் மடையும் இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.
 

Leave a comment

Comment