TamilsGuide

கனடா-கிரீன்லாந்து இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம்

கனடாவுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

'டேவிஸ் ஜலசந்தி'யின் (Davis Strait) கீழ் இந்த 'மைக்ரோ கண்டத்தை' ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இது முதன்முறையாக உப்சாலா பல்கலைக்கழகம் (Sweden) மற்றும் டெர்பி பல்கலைக்கழகம் (UK) ஆகியவற்றின் புவியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இங்குள்ள டெக்டோனிக் தட்டு அசைவுகளை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ​​இந்த பகுதியில் 402 கி.மீ நீளம் கொண்ட சிறிய கண்டம் இருப்பது தெரிய வந்தது.

இந்த கண்டம் சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
 

Leave a comment

Comment