TamilsGuide

ரகு தாத்தா.. பெண்கள் மீதான திணிப்பு பற்றியது- நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்று டீசர் வெளியானது.

காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ரகுதாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:-

ரகு தாத்தா.. பெண்கள் மீதான திணிப்பு பற்றியது. டீசரிலும் பார்த்திருப்பீர்கள். எல்லா விதமான திணிப்பு பற்றியும் தான் இந்த படம்.

இந்த படத்தில் சின்ன மெசேஜ் சொல்ல முயற்சி செய்திருக்ககோம். ஆனால், உபதேசம் சொல்ற மாதிரி இருக்காது.

இந்தப் படம் பார்க்கும்போது தெரியும். அதில், இந்தியை படத்தில் டிரை பண்ணியிருக்கோம். இதில் எந்த அரசியல் சாயலும், சர்ச்சைக்குரியதாகவும் எதுவும் இல்லை.

படத்திற்கு வரும் மக்கள், ஜாலியாக படத்தை பார்த்து செல்லும் வகையில் கதை அமைந்திருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment