TamilsGuide

கனடாவில் பணம் தொலைத்தவர்களுக்கான அறிவிப்பு

கனடாவில் பணம் அல்லது வேறும் சொத்துக்களை தொலைத்தவர்களுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொலைக்கப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது மறந்து போன சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்பேர்ட்டா மாகாண அரசாங்கம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு உரிமை கோரப்படாத 154 மில்லியன் டொலர் பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான உரிமை கோரப்படாத பணம் 650 பேருக்கு மீள வழங்கப்பட்டுள்ளது.

அல்பேர்ட்டாவின் உரிமை கோரப்படாத சொத்து பதிவு புத்தகத்தில் இந்த தகவல்கள் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிலருக்கு தாங்களுக்கு இவ்வாறு பணம் அல்லது சொத்துக்கள் இருப்பதே தெரியாது என மாகாண நிதி அமைச்சர் நேட் ஹோர்னர் தெரிவிக்கின்றார்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரையில் 8500 பேருக்கு 14 மில்லியன் டொலர் பணம் மீள வழங்கப்பட்டுள்ளது.

தொலைந்த பணத்தை உரிமை கோருவதற்கு பத்தாண்டு கால அவகாசம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a comment

Comment