TamilsGuide

பாதாள உலகக்குழுவினரைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தற்போது பல்வேறு தரப்பினரின் கைகளுக்கும் சென்றுள்ளமையால், நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது ”போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக்குழுவினரை தாம் முன்பு இருந்ததைவிடவும் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், எல்.டி.டி.ஈ. அமைப்பின் ஆயுதங்கள் பல்வேறு தரப்பின் கைகளுக்குச் சென்றுள்ளமையே நாட்டில்  துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் போதைப்பொருள், பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை தாம்  மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment