TamilsGuide

ஓமானில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தான் பிரஜைகள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் அதிகளவான இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதுவதுடன் அங்கு மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், அங்குள்ள இலங்கையர்களை குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு, அங்குள்ள இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாயின், ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 24 69 78 410 என்ற இலக்கத்திற்கோ அல்லது ஓமான் பொலிஸாரின் 24 52 1885 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறும் ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment