TamilsGuide

இந்த பரிதாப பெண்ணை நிறைய மீம்சுகளில் பார்த்து இருக்க முடியும்...அவரை பற்றி ஒரு youtube சேனலுக்கு ஷங்கர் அளித்த பேட்டி..

"அந்நியன் படத்தில் மிகவும் பாவமாக ஒரு பெண் ஒருவர், தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற ரீதியில் அம்பி விக்ரமிடம் பேசிச் செல்வார். அவரை அந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்த சம்பவம், மிகவும் சுவாரசியமான ஒன்று. அதை நான் இங்கு பகிர்கிறேன்.

எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அந்த கதாபாத்திரத்துக்கான நடிகர்களை தேர்வு செய்யும் செயல்முறை நடந்து கொண்டே இருந்தது. ஜூனியர் நடிகர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோரை, அந்த கதாபாத்திரத்திற்காக நாங்கள் ஆடிஷன் செய்தோம். ஆனாலும் இறுதிவரை எனக்கு திருப்தி ஏற்படவில்லை. 

இதையடுத்து நான் என்னுடைய உதவி இயக்குநர்களிடம், ஒரு பாவமாக இருக்கும் பெண்ணை உங்களால் தேட முடியவில்லை. நாளைக்கு ஒரு நாள்தான் உங்களுக்கு டைம். அதற்குள் எனக்கு அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரியான பெண் வேண்டும். அப்படி நீங்கள் கொண்டு வரவில்லை என்றால், நானே காரை எடுத்துக் கொண்டு தெருத்தெருத்வாக சுற்றி தேடி அலைந்து கொள்கிறேன் என்றேன். 

துணைக்கு வந்தவருக்கு அடித்த லக் இந்த நிலையில் மறுதினம் நான் அலுவலகத்திற்கு வரும் போது, அலுவலகத்தின் முன்னால், கூட்டம் கூட்டமாக பெண்கள் நின்றார்கள். நான் நேராக என்னுடைய அலுவலக மாடிக்கு சென்றேன். அங்கிருந்து பார்த்தால் கீழே நிற்பவர்களை நன்றாக பார்க்க முடியும். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். 

அப்போது ஒரு பெண் கதவோரமாக பாவமாக நின்று கொண்டிருந்தார். இதையடுத்து நான் என்னுடைய உதவி இயக்குநரிடம், நாம் தேடக்கூடிய பெண் அவர்தான். அவரை கூட்டி வாருங்கள் என்று சொன்னேன். இதையடுத்து அவர்கள், சார் அவர்கள் நடிக்க வந்த பெண்ணின் துணைக்கு வந்தவர் என்று சொல்ல, துணைக்கு வந்தால் என்ன? அவரது லுக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அவரை உடனே அழைத்து வாருங்கள் என்று சொன்னேன். 

அவரும் உடனே வந்து நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. நான் இன்னொரு பெண்ணுக்கு துணைக்கு வந்தவர்.எனக்கு நடிக்கலாம் வராது என்று சொன்னார். ஆனால் நான் அவரை சமாதானம் செய்து வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன். படப்பிடிப்பில் அவர் நிறைய டேக் எடுத்தார். இருப்பினும் அவருடைய லுக்கிற்காக அவரை தேர்வு செய்து, நடிக்க வைத்தேன். அது எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திர தேர்வுகளில் ஒன்று." என்று பேசினார்...

நன்றி: ஹிந்து தமிழ்.

Leave a comment

Comment