TamilsGuide

LPL 2024 - கொழும்பை வீழ்த்திய தம்புள்ளை

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 20 ஆவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers)  அணியை வீழ்த்தி  தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை தண்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 124 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித்  துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment