TamilsGuide

யாழ்ப்பாணத்தில் பட்டிமன்றம் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் - வியாழன் யாழ். நகரிலும் வெள்ளி அரியாலையிலும் நிகழ்வுகளில் பங்கேற்பர்

அரியாலை சனசமூக நிலையத்தின் 75 ஆவது ஆண்டு விழாவின் ஓரங்கமாக நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக உலகப்புகழ் பெற்ற பேச்சாளர்களான பட்டிமன்றம் ராஜா, பாரதிபாஸ்கர் இருவரும் யாழ்ப்பாணம் வருகைதருகின்றனர். 

எதிர்வரும் 18.07.2024 வியாழன் மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் (யாழ் பொது நூலகம் அருகில்)  இவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெறும். 

இந்நிகழ்வில் பாடசாலை சொற்சமர் விவாத அணிகளில் பங்கேற்போர் மற்றும் பட்டிமன்றங்களில் பங்கேற்போர் பயன்பெறும் வகையில் விவாத மேடையைக் கையாள்வது எப்படி என்ற பொருளில் இருவரும் கருத்துரைகளை வழங்குவர்.

இதில் வயது வேறுபாடின்றி பட்டிமன்றத்தில் ஆர்வம் உள்ள எவரும் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 

இதேவேளை எதிர்வரும் 19.07.2024 வெள்ளி இரவு அரியாலை சனசமூக நிலையத்தின்  (J Hotel எதிராக)  75 ஆவது ஆண்டு விழாவின் இலக்கியவிழா மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.  இதில் இரவு 8.30 மணியளவில் வாழ்வில் எப்போதும் உறுதுணையாக இருப்பது உறவா? நட்பா?  என்ற பொருளில் பட்டிமன்றம் ராஜா தலைமையில் பாரதிபாஸ்கர் மற்றும் யாழ்ப்பாணப் பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமண்டபம் இடம்பெறும்.
 

Leave a comment

Comment