TamilsGuide

அமைதியான தனிமையான தொடர்ந்து கேலி செய்யப்பட்ட சிறுவன் மேத்யூ.. டிரம்ப்பை சுட்ட இளைஞனின் பின்னணி

அமேரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது.

அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து அவர் எழுதியிருந்த பேப்பர் குறிப்பை பார்பதற்காக அவர் சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைந்தார். அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த தாமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டதில் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயரிலிழந்தார். அவரைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே மேத்யூவுக்கு நண்பர்களும் இல்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான். அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.

அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில்ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது.
 

Leave a comment

Comment