TamilsGuide

ஓடிடியிலும் மகுடம் சூடிய மகாராஜா திரைப்படம்

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது.

மகாராஜா திரைப்படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வார அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் வார பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது மகாராஜா திரைப்படம்.
 

Leave a comment

Comment