TamilsGuide

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம்  திறப்பு

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை கிளிநொச்சியில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றது

கிளிநொச்சி மத்தியக்கல்லூரி மைதானத்தில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது. வெல்வோம் ஸ்ரீலங்கா திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வுகள்  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் இந்த  நிகழ்வுகள்று இடம்பெற்றன.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த  நிகழ்வில் திணைக்கள செயலாளர், உதவி செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இளைஞர் யுவதிகளுக்கான எதிர்காலம் என்ற தொணிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்தல் உட்பட தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றன. தொழில் வங்கிக்கென ஆட்களை பதிவு செய்தல் பயிற்சி செயலமர்வு உள்ளட்டவையும் வெல்வோம் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் செயற்பாடுகளாகும்.

அத்துடன் வெளிநாடு வாழ் இலங்கை பணியாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளட்டவையும் இதன்கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம்  இன்று திறந்து வைக்கப்பட்டது

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  இதனை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் , மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் , அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்
 

Leave a comment

Comment