TamilsGuide

பொது வேட்பாளர் விடயத்தில் சில தமிழ்த் தலைவர்கள் குளிர் காய நினைப்பது வேதனை – திலீபன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியா மகாரம்பைகுளத்தில் புனர்மைக்கப்பட்ட வீதி ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தற்போது ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

அதிலும் பொது வேட்பாளர் ரீதியில் இந்த ஜனாதிபதி தேர்தலை குழப்பி சில தமிழ் அரசியல் தலைவர்கள் குளிர் காய நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எனினும் முன்பை விட மக்கள் தற்போது விழிப்படைந்திருக்கின்றார்கள். எது சரி எது பிழை எது நடைமுறை சாத்தியமானது என்பதனை உணரத் தொடங்கி இருக்கின்றார்கள்.

ஆகவே இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இல்லாமல் போய் விடுகின்ற ஒரு விடயமாகவே காணப்படும்.

அத்துடன் எனது பயணம் பின்தங்கிய கிராம மக்களுக்கான பயணமாக அவர்களுக்கான அபிவிருத்திக்கான பயணமாகவே அமையும்” என நாடாளுமன்ற உறுப்பினா் கு.திலீபன்மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment