• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்

இலங்கை

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பவுள்ள நிலையிலேயே மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்புடன் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த மனிதப்புதைகுழியில் இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இடம்பெற்ற அகழ்வாய்வுகளின் படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியில் இருந்து 40 மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவினால் மேற்கொள்ளட்ட ஆய்வின் போது முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

எனினும், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் நிறைவடைந்தமையால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இன்று முதல் மீளவும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply