• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தோஷகானா ஊழல் தொடர்பான போராட்டம் வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருட்களை சட்டவிரோதமா விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இம்ரான் கான் இது தொடர்பாக பொய்யான தகவல்களை அளித்ததாக தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்தது.

மேலும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் பாகிஸ்தான் அரசு இம்ரான் கான் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்ததும் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் போராட்டம் செய்யப்பட்ட வழக்கில் பெற்ற தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்று கடந்த வாரம் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில் தற்போது இம்ரான் கான் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல் ஷா மெஹ்மூத் குரேசி, ஷேக் ரஷீத், ஆசாத் குயேசர், ஷெர்யார் அப்ரிடி, பைசல் ஜாவித், ராஜா குர்ராம் நவாஸ், அலி நவாஸ் அவான் போன்றோரும் விடுவிக்கப்பட்டனர்.

இஸ்லாத்திற்கு எதிராக திருமணம் செய்ததாக இவர் மீது வழக்கு தொடர்ந்து 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டால் இம்ரான் கான் சிறையில் இருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.
 

Leave a Reply