TamilsGuide

கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

டாக்ஸி சாரதிகளுக்கு 143 மில்லியன் டாலர் நட்ஈடு வழங்குமாறு கனடாவின் கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனடிய உச்சநீதி மன்றம் இவ்வாறு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.

கியூபெக் மாகாண அரசாங்கம், டாக்ஸி சாரதிகளின் அனுமதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்திருந்தது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக டாக்ஸி சாரதிகள் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

முன்னணி டாக்ஸி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஊபர் நிறுவனத்திற்கு சந்தையில் பிரவேசிக்க சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருந்த டக்ஸி சாரதிகளின் உரிமம் சட்டவிரோதமான முறையில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியாயமான நட்டு ஈட்டுத்தொகை வழங்காது அரசாங்கம் சாரதிகளுக்கு அநீதி இழைத்துள்ளதாக நீதிபதி சில்வானா காண்டே தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் டாக்சி சாரதிகளுக்கு 143 மில்லியன் டாலர் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் வட்டி தொகையை சேர்த்தால் இந்த தொகையானது 219 மில்லியங்களாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று ரீதியான வெற்றி என சாரதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி புரூஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஊபர் போக்குவரத்து சேவையை ஆரம்பித்தபோது டாக்ஸி சாரதிகளுக்கு சந்தை பெறுமதியை விடவும் குறைந்த அளவிலான நட்டஈடு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்படி வழக்கு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் கியூபிக் மாகாண அரசாங்கத்திற்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றின் இந்த தீர்ப்பின் பிரகாரம் சாரதி ஒருவர் சராசரியாக 50000 முதல் 60000 டாலர்கள் வரையில் நட்ட ஈட்டு தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த தீர்ப்பு குறித்து 30 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
 

Leave a comment

Comment