TamilsGuide

ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் அறிவிப்பு-கல்வி அமைச்சர்

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மூன்றாண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை  தற்போது புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 11,048 ஆக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கு 2,500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment