TamilsGuide

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா பார்வை உள்ளது.

அந்த நகர் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இடைவிடாமல் எரிசக்தி மற்றும் மின்சாரம் உற்பத்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மின்சார உற்பத்தி திறனை இழந்துள்ளது. 16 ஏவுகணைகள் மற்றும் 13 டிரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment