TamilsGuide

மன்னாரில் வேன் விபத்து - பெண் ஒருவர் பலி - 14 பேர் காயம்

மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில்  ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  அதில் பயணித்த 14பேர் காயமடைந்துள்ளதுடன்,  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று (21)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி  பிரதேசத்திற்கு சென்ற வேன்  முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு  வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில்  காயமடைந்த அனைவரும்  முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,      மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாகனத்தில் பயணித்த அனைவருமட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment