TamilsGuide

ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்பட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் - சரித ஹேரத்

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போதைய ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் என்றும் ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேர்தலை பிற்போடும் நடவடிக்கைக்கு எதிராக பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜூலை 17 ஆம் திகதியின் பின்னர் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துவிடும்.  எனவே தேர்தலை தாமதப்படுத்துவதற்கு நாடாளுமன்றின் ஊடாக ஏதேனும் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டால்  அதனை முறியடிக்கவுள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுடன்  இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதோடு எதிர்வரும் 3 மாதங்களில் அரசியலில் ரீதியில் பாரிய மாற்றம் நிகழும் என்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment