TamilsGuide

சஜித் வென்றால் சம்பளம் உறுதி - பழனி திகாம்பரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தயாராகி வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டன், வெலிஓயா பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பழனி திகாம்பரம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு சரத் பொன்சேகா விரும்பினார்.ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ,எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச,

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கு அனுமதியை வழங்கவில்லை. இந்த வாய்ப்பினை வழங்காததான் காரணமாக  சஜித்தை, சரத் பொன்சேகா விமர்சித்து வருகின்றார் என தெரிவித்தார்.

குறிப்பாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் பொன்சேகா விமர்சித்து வருகின்றார். சரத் பொன்சேகா கடந்த காலத்தில் இராணுவத்தளபதியாக இருந்தார். பின்னர் இந்த காலப்பகுதியில் பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைய தயாராகி வருகின்றார். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச மாபெரும் வெற்றியைப் பெறுவார் என்றும் பழன் திகாம்பரம் குறிப்பிட்டார்.

இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் ஜக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் நிச்சயமாக வழங்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவான பின்னர் இதனை நடைமுறைப்படுத்துவதாக உறுதியதித்துள்ளதாகவும் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்
 

Leave a comment

Comment