TamilsGuide

3-வது நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதித்தது லிதுவேனியா

ஐரோப்பிய யூனியனில் உள்ள லிதுவேனியா 3-வது நாடு தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டத்திற்கு 87 எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். ஒரு எம்.பி. மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். 8 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இது வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களின் இடம்பெயர்வுகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடியும் என எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின்படி ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து வருடத்திற்கு 40 ஆயிரம் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை அங்கு நிரந்தரமாக வசிப்போர்களின் எண்ணிக்கையில் 1.4 சதவீதம் ஆகும்.

வெளிநாாட்டு தொழிலாளர்கள், நிறுவனத்தினற்கான தேவை, தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை வழங்குவதற்கான நடைமுறை ஆகியவை கடுமையாக்கப்பட்டுள்ளன.

கடந்த வருட கணக்குப்படி லிதுவேனியாவில் வசித்து வந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு 2 லட்சமாக உயர்ந்ததாக உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருந்துதான் அதிக அளவில் வருவதாக தெரிவித்துள்ளது. 2023-ல் 1.42 லட்சம் பேர் வந்ததாக தெரிவித்துள்ளது.

தற்போது லிதுவேனியாவில் 1.314 லட்சம் 3-வது நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைபார்த்து வருவதாகவும், இது கடந்த ஆண்டைவிட 65.5 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. ஐரோக்கிய யூனியன் குடியுரிமை பெற்றவர்கள் 10 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இது 66.7 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment