TamilsGuide

மன்னாரில் அகற்றப்பட்ட சோதனைச் சாவடி

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பல வருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் பலனாக இன்றையதினம் குறித்த பாலத்திற்கு அருகில் காணப்பட்ட வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அப்பகுதியில் ராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் இராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment