TamilsGuide

பிரான்சில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்., 12 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் 

பிரான்ஸ் நாட்டில் 12 வயது சிறுமி, மூன்று பேரால் துஷ்பிரயோகம் செய்யப்பட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி யூதர் என்பதால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றம் சாட்டப்பட்டவரிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரான்சில் இம்மாதம் 30-ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன் நடந்த இச்சம்பவத்தால், இரு சமூகத்தினரிடையே பதற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான யூதர்களைக் கொண்ட நாடு பிரான்ஸ். ஐரோப்பாவில், பெரும்பாலான முஸ்லிம்கள் பிரான்சில் வாழ்கின்றனர்.

France24-இன் அறிக்கையின்படி, இந்த சம்பவம் பாரிஸுக்கு அருகிலுள்ள கார்பிவோ (Courbevoie) நகரில் நடந்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு, சிறுமி உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அச்சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

2 பேரை அடையாளம் கண்டுகொண்ட சிறுமி

பாதிக்கப்பட்ட சிறுமி சனிக்கிழமை மாலை, தனது தோழியுடன் தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் அமர்ந்திருந்தபோது, ​​3 சிறுவர்கள் தன்னிடம் வந்ததாகக் கூறினார்.

அவர்கள் அனைவரும் ஒரே வயதுடையவர்கள். அவர்கள் அவளை ஒரு கொட்டகையின் அருகே இழுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும், அந்த நேரத்தில் அவர்கள் யூத எதிர்ப்பு கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று சிறுவர்கள் சிறுமியை அடித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

மைனர் பெண் இரண்டு சிறுவர்களை அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மூன்றாவது சிறுவனும் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a comment

Comment