TamilsGuide

பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் 

பூமி தொடர்பில் கலிபோர்னியா (California) பல்கலைக்கழக விஞ்ஞானிகள்  புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பூமியின் உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதால் மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னதாக 2010 இல், பூமியின் உட்புறத்தின் சுழற்சி வேகம் குறையத் தொடங்கியுள்ளதாக  பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது பூமிக்கு கீழே 4,800 கி.மீ ஆழத்தில் வெப்பமும் அடர்த்தியும் நிறைந்த இரும்பு மற்றும் நிக்கல் கலந்த கோளம் ஒன்று சுழன்று கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் முன்னரே கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலைமையால் உலகில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலமாற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் ஊகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் ஆய்வுக்காக தெற்கு அட்லாண்டிக்கில் (South Atlantic)  உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி 1991 மற்றும் 2023 க்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்களை ஆய்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment