TamilsGuide

கணவரிடம் தன்னைக் கொன்றுவிட கெஞ்சிய லண்டன் தாயார்

தென் லண்டனை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர், தாம் எடுத்த ஒரு முடிவு வாழ்க்கையை தலைகீழாக மாற்றியதை வெளிப்படுத்தியுள்ளார்.

தென் லண்டனை சேர்ந்த 44 வயது Laura Turner தமது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய அந்த சம்பவம் தொடர்பில் மனம் திறந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான Laura Turner சுமார் 15 ஆண்டுகள் project managemer பொறுப்பில் பணியாற்றியவர்.

ஆனால் அவர் எடுத்த அந்த ஒற்றை முடிவு அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து கொஞ்ச நாள் ஓய்வெடுக்கும் பொருட்டு முடிவு செய்த Laura Turner ஒரு நாள் ஃபேசியல் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

அதுவே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கிங்ஸ்டன் சாலையில் அமைந்துள்ள RHealthB என்ற சலூனிற்கு சென்றுள்ளார். வெறும் அடிப்படையான ஃபேசியல் செய்துகொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்துள்ளது.

ஆனால் அவருக்கு galvanic facial சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த சிகிச்சையின் ஒருபகுதியாக முகத்தில் மின்சாரமும் பயன்படுத்தப்படும் என்பதை அவருக்கு விளக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

சிகிச்சை தொடங்கி வெறும் 2 நிமிடங்களில் லாராவின் பற்கள் வலிக்கத் தொடங்க, மிகவும் வித்தியாசமான ஒரு உணர்வுக்கு தள்ளப்பட்டதும், சிகிச்சையை நிறுத்தக் கூறியுள்ளார்.

அப்போதுதான் லாராவிடம் பற்களுக்கு இதற்கு முன் சிகிச்சை எடுத்துக்கொண்டதை விசாரித்துள்ளனர். மட்டுமின்றி, உடலில் ஏதேனும் உலோகம் இருந்தால் இந்த சிகிச்சையை முன்னெடுக்கக்கூடாது என்பதையும் லாரா அறிந்துகொண்டுள்ளார்.

அந்த சில நிமிட சிகிச்சைக்கு பிறகு லாராவின் பற்களில் வலி தொடங்கியதுடன், வாய்க்குள் ஒருவித எரியும் உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல் வலி காரணமாக தூக்கம் இல்லாமல் போனது.

இதற்கு என பல சிகிச்சைகள் மேற்கொண்டும் பலனளிக்காமல் போயுள்ளது. இறுதியில் லாராவுக்கு மின் வெப்ப காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.

ஒவ்வொரு நொடியும் வலியால் துடித்ததாக கூறும் லாரா, உடல் முழுவதும் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு இருந்ததாக தெரிவித்துள்ளார். தமது மூன்று பிள்ளைகளையும் கவனிக்க முடியாமல் திணறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தமது கணவரிடம் தம்மைக் கொன்றுவிட கெஞ்சியதாகவும் லாரா குறிப்பிட்டுள்ளார். தற்போதும் லாராவால் முழுமையாக தூங்க முடியாத நிலை உள்ளதும். தூக்க மாத்திரைகள் எடுத்திருந்த போதும், அவரால் தூங்க முடியவில்லை என்றே கூறுகிறார்.

இதனிடையே, அதிக தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டு ஆபத்தான கட்டத்திலும் லாரா மீட்கப்பட்டுள்ளார். அவர் விலா எலும்புகள் இடுப்பு எலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டு மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மட்டுமின்றி, தமது பிள்ளைகளுக்கு விஷம் அளிக்க முயன்றதாக கூறி, பொலிசார் கைதும் செய்துள்ளனர். இப்படியான மிக நெருக்கடியான சூழலை லாரா எதிர்கொண்டுள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டாலும், மேலதிக விளக்கமளிக்க மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. 
 

Leave a comment

Comment