TamilsGuide

பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்! - வெளியான க்யூட் புகைப்படங்கள்

பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார். சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் அப்போது ட்ரெண்டானது. அந்த சமயத்தில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் பிரதீப்புக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது நீண்ட நாள் காதலியை அவர் விரைவில் கரம்பிடிக்க போகிறார்.

டாடா, அருவி உள்ளிட்ட படங்களில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment