TamilsGuide

நள்ளிரவுக்குள் நீா் விநியோகம் வழமைக்குத் திரும்பும்

கொழும்பு நகரில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் இன்று நள்ளிரவுக்குள் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹைலெவல் வீதியில் கொடகம சந்திக்கு அருகாமையில் இன்று அதிகாலை, கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் மீது வேக்கட்டுப்பாட்டை இழந்த  காரொன்று மோதியதில்  வெடிப்பு ஏற்பட்டு  கொழும்பு நகரின் பல பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்பட்டது.

இதன்படி, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தின் போது காரில் பயணித்த நால்வர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைகளுக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment

Comment