TamilsGuide

கனடாவின் லொத்தர் சீட்டில் 55 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி

கனடாவின் டொரன்டோ பெரும் பாகப்பகுதியில் நபர் ஒருவர் 55 மில்லியன் டொலர் பண பரிசினை வென்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு அவர் பணப்பரிசு வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லோட்டோ மேக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மில்டன் பகுதியில் இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ லொத்தர் மற்றும் விளையாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த லொத்தர் சீட்டிலுப்பில் வேறும் பரிசுகளும் வென்றெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் இரவு நடைபெற உள்ள மற்றுமொரு லொத்தர் சீட்டிலுப்பில் 66 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு, காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment

Comment