TamilsGuide

தந்தையர் தினம் - மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பகிர்ந்த நயன்தாரா

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தினம் வாழ்த்துக்கள்" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment