TamilsGuide

வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது

களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்த சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

களுத்துறையில் இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்திருந்த யுவதி, தான் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment