TamilsGuide

கனடாவில் இடம்பெற்ற நூதன மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

கனடாவில்(Canada) இடம்பெற்ற நூதன மோசடி சம்பவமொன்று தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நூதன மோசடியின் காரணமாக ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐயாயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தான் முன்பதிவு செய்யாத மடிக் கணனி ஒன்று வீட்டு வாசலில் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் குறித்த பெண்ணும் அவரது கணவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் போது அந்த தம்பதியினரின் கடன் அட்டை கணக்கிலிருந்து 4900 டொலர்கள் அறவீடு செய்யப்பட்டிருந்தமையும்,  நூதமான முறையில் கடன் அட்டை தகவல்களை திருடி மடிக்கணனி முன்பதிவு செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்து, மோசடிகாரர்கள் இதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கே பொருளை அனுப்பி , அது டெலிவரி செய்யும் போது வீட்டில் யாரும் இல்லாவிட்டால் அந்தப் பொருளை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தி இந்த கடன் அட்டை நிறுவனத்திடமிருந்து அவர்கள் பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் வங்கிக் கணக்குள், கடன் அட்டைகள் உள்ளிட்டன தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment