TamilsGuide

சினிமாவில் மட்டுமே என் தேடல்- ஜி.வி.பிரகாஷ்குமார்

'வெயில்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், அடுத்தடுத்து தொட்ட படங்கள் அனைத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து கவனம் ஈர்த்தார்.

'டார்லிங்' படம் மூலமாக கதாநாயகன் அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் அவருக்கு 'ரெபல்', 'கள்வன்', 'டியர்' என 3 படங்கள் வெளியாகி உள்ளன. விரைவில் திரைக்கு வர உள்ள 'கிங்க்ஸ்டன்' படம் அவரது நடிப்பில் வெளியாகும் 25-வது படம் ஆகும்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் கூறும்போது, "இந்த ஆண்டு எனக்கு ராசியான ஆண்டாகவே அமைந்துள்ளது. விரைவில் 'கிங்க்ஸ்டன்' படமும் வெளிவர இருக்கிறது. எனது திரை பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. இதன் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

என்னை பொறுத்தவரை சினிமாவில் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் எதிர்பாராத விதமாக நமக்கு கிடைக்கும். நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது.

என் தேடல் அனைத்தும் இப்போது சினிமாவில் மட்டுமே. நடிப்பிலும், இசையிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என் இலக்கு" என ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார்.
 

Leave a comment

Comment