TamilsGuide

கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்- திவ்யா ஸ்பந்தனா

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர் என்று பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.

மேலும், "தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது. ஆனால் அப்படியொன்றும் அவருக்கு செல்வாக்கு இல்லை. அவர் தேர்தலில் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment