TamilsGuide

பணமோசடி வழக்கில் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரிடம் அமலாக்கத்துறை விசாரணை

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு தாக்கல் செய்தார்.

ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பரவா ஃபிலிம்ஸ் ஒரு ரூபாய் கூட ஹமீதுக்கு வழங்கவில்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி அவருடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்திற்காக முதலீடாக ₹7 கோடி பெற்று முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் படத்தின் தயாரிப்பாளர் - நடிகர் ஷோபின் ஷாஹிர் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் ஷோபினிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a comment

Comment