TamilsGuide

தலைமன்னாரில் கனிய மணல் அகழ்வு - மக்கள் எதிர்ப்பு

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கனிய மணல் அகழ்வு இடம்பெற்ற நிலையில் இன்று காலை ஒன்றுகூடிய மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களின் எதிர்ப்பிற்கு நேரடியாகச் சென்று தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் முறையற்ற விதத்தில் அபகரிக்கப்பட்ட காணியில் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தது.

குறித்த காணி இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்விற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வு இடம்பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment