TamilsGuide

வாடகை வருமான வரியை அமுல்படுத்த IMF தீர்மானம்

இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கையை தொடர்ச்சியாகப் பேணுவது அவசியமென சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் இரண்டாவது மீளாய்வுக்கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய அறிக்கை ஒன்றையும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்குள் இந்த வரி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

இலங்கையின் அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையுடனான கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment