TamilsGuide

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி  தெரிவித்துள்ளார்.

கொழும்பு  நடைபெற்ற கத்தோலிக்க திருச்சபையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

குழுவின் முன் சாட்சியமளிக்க வேண்டியவர்கள் இன்னும் அந்தந்த பதவிகளில் இருப்பதால், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெறுவது சந்தேகத்திற்குரியது என்று அவர் கூறினார்.

எனவே மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டவிதிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உரிய  விசாரணை அதிகாரியை நியமிக்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடையங்கள்  எதுவும் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை எனவும், ஜனாதிபதி தேர்தலை  இலக்காகக் கொண்டு மக்களை ஏமாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என சந்தேகம் இருப்பதாகவும்  சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment