TamilsGuide

கால் போன போக்கிலே.. ஜி7 மாநாட்டில் ஜோ பைடன் அலப்பறைகள்

அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று [ஜூன் 14] முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் வைத்து நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இத்தாலி சென்றுள்ளார்.

இத்தாலியில் குழுமத்தொடங்கியுள்ள உலகத் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி இந்திய முறையில் நமஸ்தே சொல்லி வரவேற்கும் வீடியோ வைரலானது.

இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.

ஜி7 நாடுகளின் சக தலைவர்களான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரோன், ஆகியோருடன் நடந்து செல்லும்போது அவர்களை விட்டு தனியாக பிரிந்து கால் போன போக்கில் ஜோ பைடன் உலாவினார். பின்னர் அவரை இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் அனைவரும் இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தார்.

முன்னதாக தன்னை வரவேற்ற மெலோனிக்கு பைடன் விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோ வைரலாக நிலையில் தற்போது கால் போன போக்கில் பைடன் உலாவும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment