TamilsGuide

இந்தியின் சூரரைப் போற்று- ஜூலை முதல்

சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. கொரோனா காலக்கட்டத்தினால் இத்திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் போய்விட்டது. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் ஓடிடி தளத்தில் பார்த்து மக்கள் இப்படத்தை பெருமளவு வரவேற்பை கொடுத்தனர். சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.

இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் கையிலே ஆகாசம் பாடல் கொடுத்த உனர்வை வார்த்தையால் சொல்ல முடியாது. அது நமக்கு எப்பொழுது கேட்டாலும் ஒரு கூஸ்பம்ப்ஸ் பாடலாக இருக்கும்.

தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை படக்குழுவினர் போஸ்டர் பதிவிட்டு அறிவித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 18 வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

Leave a comment

Comment