TamilsGuide

கட்சி சேர இசையமைப்பாளரின் அடுத்த படைப்பு

இளம் இசையமைப்பாளர் பட்டியலில் மிக முக்கியமானவராக திகழ்கிறார் சாய் அபியங்கர், இவர் பிரபல தமிழ் பின்னணி பாடகரான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார். 21 வயது ஆகும் இவர் கடந்த ஜனவரி மாதம் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நாட்களிலே இணைய தளத்தில் வைரலாகியது. இன்ஸ்டாகிராம் மக்கள் ரீல்ஸ்-சை இப்பாடலுக்கு நடனம் ஆடி பதிவு செய்த வண்ணம் கொண்டு இருந்தனர்.

கட்சி சேர வீடியோ பாடலில் சாய் அபியங்கர் பாடுவது போல, இவர் கூட நடிகை சம்யுக்தா மேனன் நடனம் ஆடியிருப்பார். இப்பாடலில் சம்யுக்தா ஆடும் ஒரு குறிப்பிட்ட ஸ்டெப் மிகப் பெரிய வைரல் எலெமண்ட் ஆனது. அதனை அனைவரும் ரீகிரியேட் செய்து போஸ்டுகளை பதிவிட்டனர். யூடியூபில் இப்பாடலை இதுவரை 12 கோடியே 90 லட்ச பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரல் பாடலை தொடர்ந்து தற்பொழுது சாய் அபியங்கர் அவரது அடுத்த பாடலான 'ஆச கூட' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலை அவரே இசையமைத்து , பாடியும் உள்ளார். இவருடன் அவரது தங்கையான சாய் ஸ்மிருத்தியும் இணைந்து பாடியுள்ளார்.

இந்த பாடலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பாடலில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்பாடலும் கூடிய விரைவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அப்யங்கர் தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக காலடி எடுத்து வைக்கும் தூரம் வெகு தூரமில்லை.
 

Leave a comment

Comment