TamilsGuide

ஐந்து சொகுசு வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் சமர்ப்பித்து கொண்டு வரப்பட்ட 5 சொகுசு வாகனங்களை இலங்கை சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்ப டி 60 கோடி ரூபா பெறுமதியான இந்த வாகனங்களை சட்டவிரோதமாக கொண்டு வந்தமையினால் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுத்திருந்தது

அதன் பின்னர், மேலதிக விசாரணைகள் தேவை என்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அறிவித்தலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, உரிய வாகனங்களை இலங்கை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment