TamilsGuide

பொய்யான குற்றச்சாட்டக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே

தம்மை தாக்கிக் காயப்படுத்தியதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை நான் தாக்கி காலில் பலத்த காயம் ஏற்படுத்தியதாக அவரது மகன் நிலுபுல் ராஜபக்ஷவும் குணதிலக்க ராஜபக்ஷவும் நான்கு தடவைகள் ஊடகங்கள் மூலம் என் மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன், மேலும் அந்த இருவருக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்துமாறு எனது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அன்றையதினம் குணதிலக ராஜபக்ச அரச அதிகாரிகள் முன்னிலையில் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என நான் அவருக்கு அறிவுரை மட்டும் வழங்கினேன் என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment