பிறப்பு 15 AUG 1957 / இறப்பு 14 NOV 2026
யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று காலமானர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியலில் என்றும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2026 திங்கட்கிழமை அன்று 10:00 மணியளவில் அவர் வசித்து வந்த வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து, நண்பகல் 12:00 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அஞ்சலி உரைகளும் இடம்பெற்று பின்னர், வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை அன்னாரின் மறைவால் மீளாத் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: RIPBOOK


