பிறப்பு 09 AUG 1940 / இறப்பு 05 AUG 2026
யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் ஏனாதிநாதன் அவர்கள் 05-08-2026 புதன்கிழமை லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், அம்பலவாணர் கந்தையா வள்ளியம்மை (நாவலடிகேணி, காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற கந்தையா ஏனாதிநாதன் (SLAS ஓய்வுபெற்ற விசேட ஆணையாளர் உள்ளூராட்சி மன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன், மாலினி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகந்தி, ஞானசம்பந்தன், சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி, ஆதவன், மயூரன், மாதங்கி, காயத்ரி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற மீனாட்சி, சிதம்பரப்பிள்ளை, அம்பலவாணர், ராஜநாயகம், சரஸ்வதி, செல்லம்மா, யோகம்மா, சுப்பிரமணியம், மாரிமுத்து, மாணிக்கம், பரமேஸ்வரி மற்றும் அம்பலவாணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
அதேபோல், காலஞ்சென்ற முருகேசு, நடராசா, வள்ளியம்மை, சதாசிவம், கணபதிப்பிள்ளை, வைத்திலிங்கம், சரஸ்வதி, குமாரசாமி, தியாகராஜா, பரமசிவம், பாக்கியம், சுப்பிரமணியம், மனோன்மணி மற்றும் தாட்சாயினி, கனகசபாபதி, சோதியம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரைப் பற்றிச் சிறப்பாக கொழும்பு தமிழ் சங்க முகநூல் பதிவிலிருந்து :
புலவர் பூரணம் ஏனாதிநாதன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகவும், நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றி தமிழ்ப்பணியில் சிறந்து விளங்கியவர். தொல்காப்பிய ஆய்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்த அவர், பல தமிழ் அறிஞர்களுடன் இணைந்து தொல்காப்பிய மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர். மேலும் பல நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் இலக்கிய, சமயக் கட்டுரைகளை எழுதிய சிறந்த எழுத்தாளரும் அறிஞருமாவார்.
பின்னாளில் இலங்கை இராமகிருஷ்ணா மிஷன் அறநெறி பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நூல்களில் சில பதிவுகள் நூலகம் என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
Live Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்..
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 10 Aug 2026 8:00 AM - 9:30 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Get Direction
Monday, 10 Aug 2026 9:30 AM - 10:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் - மகன்
Mobile : +447445245625
ஸ்ரீகாந்தன் - மகன்
Mobile : +447505121664
மாலினி - மகள்
Mobile : +61431099013


