தோற்றம் 10 FEB 1938 / மறைவு 22 JUL 2026
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதி தர்மலிங்கம் அவென்யூவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா தியாகராஜா அவர்கள் 22-07-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
நளாயினி(சித்ரா) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜெகதீஸ்வரன்(ABILA Importers Pettah) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி(இராசமணி), கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கந்தையா, அன்னலெட்சுமி(புங்குடுதீவு 7ம் வட்டாரம், கனடா) தம்பதிகளின் மூத்த சம்பந்தியும்,
சுந்தர், பாலு, இராணி, காலஞ்சென்ற சிறி, லதா, மோகன், சுமதி(கலா), சசி ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,
பிறேமினி, சபிதாமினி, சியாமினி, சபிகரன், விசாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிலாஷினி-நவநீதன்(கனடா), அனுலாஷினி(அனுலா-கனடா), திலக்ஷன்(கனடா) மற்றும் ஜெ.விஜயதாரணி(விஜிதா), ஜெயதாஸ்(கனடா), ஜெயந்தன்(வவுனியா), மனோஜன், தனுசன், டினோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ந.மஹிரா, ஜெ.மாயன், ஜெ.மாயா, ஜெ.நேயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-07-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
64/19, கொட்டாஞ்சேனை வீதி,
கொழும்பு-13
தகவல்: ஜெகதீஸ்வரன்(ஜெகன் -மருமகன்), நளாயினி(சித்ரா-மகள்)
தொடர்புகளுக்கு
ஜெகதீஸ்வரன் - மருமகன்
Mobile : +94777682356


