TamilsGuide

திரு சின்னத்தம்பி ஐயாத்துரை

பிறப்பு 15 JUN 1933 / இறப்பு 28 JAN 2026

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஐயாத்துரை அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கயிலாயப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் மீனாகுமாரி(மல்லாவி), பாலகங்காதரன்(அவுஸ்திரேலியா), ஜமுனாராணி(சுவிஸ்), பானுமதி(மல்லாவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அரவிந்தநாதன், மனோகரன், ஜெயமதி, கண்ணன், காந்தரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லம்மா, சதாசிவம், லட்சுமிப்பிள்ளை, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, தெய்வேந்திரன், முருகேசப்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி(மல்லாகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுசா- கஜேந்திரன், மதுரங்கன்- கம்சாயினி, சுரேஸ்குமார்- ஜிந்துஜா, பாலதாரங்கன்- சாகித்தியா, தஷானி- அஜந்தரூபன், ஆர்த்தி- நிக்கோலஸ், அனோஜ், அஜித், காயத்திரி, அக்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆகாஷ், தியா, சாயஷா, ஆருத், ஆரோன், குளோயி, ஆதிஸ், மதிஷா, வருண், ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் அணிஞ்சியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பானுமதி - மகள்

    Mobile : +94775174617

காந்தரூபன் - மருமகன்

    Mobile : +94777714609

கண்ணன் - மருமகன்

    Mobile : +41763788098

Leave a comment

Comment