பிறப்பு 18 JAN 1940 / இறப்பு 11 JAN 2026
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி படித்த வாலிபர் திட்டத்தின் முதலாம்பண்ணை, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தலையாழி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசரத்தினம் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கைச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாபதி பொன்னையா அன்னபூரணி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஜனா(ஐக்கிய அமெரிக்கா), கோதர்ஜனா (பிரித்தானியா), புனிதராஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்பிக்குமார், விஜயகுமார், கெளரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. ஆதித்தன், ஆதிரை(ஐக்கிய அமெரிக்கா), ஆதவன், ஆதனி(பிரித்தானியா), அச்சுதன், அபிராமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசகிருஸ்ணர், தம்பிமுத்து மற்றும் தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் நேசமலர், அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான குகதாசன், புவனராணி மற்றும் குலதாசன்(ஜேர்மனி), குணதாசன்(கனடா), Dr. புஸ்பராணி(Rada- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை யாழ். தலையாழி வீதி, நாச்சிமார் கோவிலடியில் 14-01-2026 புதன்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புனிதராஜன் - மகன்
Mobile : +61422182372
சுதர்ஜனா - மகள்
Mobile : +61422182372
கோதர்ஜனா - மகள்
Mobile : +447723465129


