அன்னை மடியில் 18 DEC 1943 / இறைவன் அடியில் 09 MAY 2025
யாழ். மத்தியவீதி, மீசாலை கிழக்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, துணுக்காய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி மயில்வாகனம் அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமசாமி மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், துணுக்காயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(முன்னாள் கிராம சேவையாளர்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பாக்கியலட்சுமி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்(துன்னாலை), தனபாலசிங்கம்(துணுக்காய்) மற்றும் விஜயலட்சுமி(மீசாலை), விஜயரட்ணம்(நோர்வே), யோகநாதன் (பதிஜவாளர்-துணுக்காய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரவணபவன்(நோர்வே), கிரிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனராணி(நோர்வே), அனுஷியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொனதன், கெவின். யூலியா(நோர்வே), பிரவீன், நவ்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவான் - மகன்
Mobile : +4745613377
கிரிதரன் - மகன்
Mobile : +447958523048
விஜயலட்சுமி - சகோதரி
Mobile : +94773444489
தங்கவடிவேல் - மைத்துனர்
Mobile : +94212270478